கோத்தா பாரு:
நேற்று மாலை 7.30 மணியளவில், பச்சோக்கில் உள்ள வில்லா டானியால்லா பீச் ரிசார்ட் அருகே உள்ள பந்தாய் கம்போங் காண்டிஸில் எட்டு வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
அமாட் அம்மார் ரஃபேல் அமாட் ரிட்டாடென் என்ற பாதிக்கப்பட்ட சிறுவன் அவனுடைய ஏனைய மூன்று நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுவதாக மூத்த தீயணைப்பு நடவடிக்கை அதிகாரி II யுஸ்ரி மாட் கானி தெரிவித்தார்.
நேற்று மாலை 6.15 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது மூன்று நண்பர்களும் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்தபோது, உயர் அலைகள் மற்றும் வேகமான நீரோட்டங்கள் காரணமாக நீரில் மூழ்கியதாகவும், அதே நேரத்தில் அவரது நண்பர்கள் காயமின்றி உயிர்தப்பினர் என்றும் அவர் சொன்னார்.