பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர

மக்கள் பணத்தை ஈட்டுவதில் தான் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர். கஷ்டப்பட்டு திறன் பட உழைத்தாலும், நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணத்தை உங்களால் சம்பாதிக்க முடிகிறதா? மகாலட்சுமி அருள் இல்லையேல் எண்ணுகின்ற செல்வமும் உங்களிடம் கிடைக்க செய்வதில்லை. சில வகையான மூலிகை பொருட்கள் பணத்தை ஈர்த்துக் கொடுக்கும். சுறுசுறுப்பாக உங்களை பணம் ஈட்ட செய்யக்கூடிய இந்த மூலிகை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள போகிறோம்.

மூலிகை பொருட்களில் மகத்துவமான இந்த ஒரு பொருள், சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கப்பெறும். இந்த பொருளை சாகா வரம் பெற்றதாக குறிப்பிடுகின்றனர். அனைத்து சம்பிரதாயங்களிலும் பயன்படுத்தப்படும் இந்த ஒரு பொருளை தர்ப்பை என்பார்கள். புல் வகையை சேர்ந்த இந்த தர்பை சாகா வரம் பெற்ற மூலிகையாகும்.

எந்த ஒரு மூலிகையும் கிள்ளி தண்ணீரில் நீங்கள் போடும் போது கொஞ்ச நாட்களிலேயே அது அழுகிப் போய்விடும். ஆனால் தர்ப்பையை நீங்கள் கிள்ளி தண்ணீரில் போட்டாலும் நீண்ட நாட்களுக்கு அழுகாது. நீங்கள் போட்டபடி அப்படியே தான் இருக்கும். அதனால் தான் அதை சாகா வரம் பெற்றதாக கூறுகின்றனர். தர்ப்பையை பூச்சிகள் அரிப்பதில்லை. கோவில்களில் இருக்கும் சிலைகளும், விக்கிரகங்களும், கோவில் பாத்திரங்களும் தர்ப்பையின் சாம்பலைக் கொண்டு தான் துலக்குகின்றனர்.

சுப காரியங்களுக்கும் தர்பை பயன்படுத்துவார்கள், அசுப காரியங்களுக்கும் தர்ப்பையை பயன்படுத்துவார்கள். மகத்துவங்கள் நிறைந்த இந்த தர்பை வீட்டில் இருப்பது நல்லது. கொஞ்சம் தர்ப்பையை எடுத்து நீங்கள் பணம் வைக்கக் கூடிய பீரோவில் வையுங்கள். பணத்துடன் சேர்த்து தர்ப்பையை வைக்கும் பொழுது பணம் ஆனது பெருகும். லட்சுமி கடாட்சம் அங்கு அதிகரிக்கும், எனவே சேமிக்கின்ற பணம் குறைந்து போகாமல் மீண்டும் மீண்டும் அதிகரித்து உங்களுடைய செல்வ வளத்தை பெருக செய்யும்.

பணம் இருக்கும் எல்லா இடங்களிலும் தர்ப்பையை வைக்கலாம். சாதாரணமாக நீங்கள் பணம் எடுத்துச் செல்லக் கூடிய மணி பர்ஸ் முதல் கட்டு கட்டாய் பணம் அடுக்கி வைக்கும் லாக்கரில் கூட நீங்கள் தர்ப்பையை வைக்கலாம். தர்ப்பையை ஒரு வெள்ளை துணியில் சுற்றி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பணத்துடன் சேர்த்து அப்படியே வைத்து விடுங்கள். இந்த தர்ப்பையை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பை அழியாத சாகா வரம்பற்ற மூலிகை என்பதால் பணத்தையும் அது அழிய விடுவதில்லை. வீட்டில் பூஜை செய்யும் பொழுது தர்பைக்கு தூபம் மட்டும் காண்பியுங்கள் போதும்.

காலையில் எழுந்ததும் தர்பை கலந்த தண்ணீரில் குளியுங்கள். குளிக்காவிட்டாலும் தர்பை கலந்த தண்ணீரை தலையில் மூன்று முறை தெளித்துக் கொள்ளுங்கள். இது உங்களிடம் இருக்கும் சோம்பல் தோஷத்தை போக்கும், சுறுசுறுப்பை உண்டாக்கும். நேர்மறையான சிந்தனைகளை பெருக செய்யும். உங்களிடம் திறமைகளுக்கு தீனி போடும் வகையில் இது நல்ல பலன்களை கொடுக்கும் அற்புத மூலிகை ஆகும். சோம்பல் தகர்த்து உங்களை சுறுசுறுப்பாக வேலை செய்ய வைத்து, பணத்தை நிறைய ஈட்ட செய்யும்.

கொண்டு வந்த பணத்துடன் தர்ப்பையை வைக்கும் பொழுது அது வீண் விரயமாகாமல் எண்ணிய எண்ணம் போல் செலவு செய்யவும் வைக்கும். தர்பையை கால்களால் மிதிக்கக்கூடாது. குப்பையில் போடவும் கூடாது. சாம்பலாக்கி சாம்பிராணியுடன் அதன் புகையை வீட்டில் காண்பித்தால் திருஷ்டிகள் நீங்கி, கெட்டவை விலகும், சந்தோஷம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here