ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான்கள் அராஜகம் : ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் பெண்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வந்தாலும் தலிபான்கள் அதனை பொருட்படுத்துவதாக இல்லை.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது விவகாரங்கள் மற்றும் தலிபான் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், பெண்கள் இனி ஆண் டாக்டர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் இதனைக் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here