மலேசியாவின் வளர்ந்து வரும் அரசியல் சூழலில், கெஅடிலான் இளைஞர் பிரிவின் (AMK) தேசிய தலைவராக முகமது கமில் அப்துல் முனிம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருப்பது இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது. அரசியலுக்கு அவர் புதிய முகமாக இருந்தாலும் அவர் நிதியமைச்சரின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நியமனம் குறித்து கமில் கூறுகையில் இளைய தலைமுறையை கட்டியெழுப்பி வழிநடத்தும் நேரடிப் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு இளைஞரும் தேசிய வளர்ச்சி கட்டமைப்பில் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தனது தலைமையின் கீழ், தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் மிகவும் சுறுசுறுப்பான, பயனுள்ள ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக, இளைஞர்களிடையே திறமை, தொழில்முனைவோர், சமூக செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன், மாநில அளவிலும் கிழக்கு மலேசியாவிலும் தேசிய இளைஞர் அதிகாரமளிப்பு கட்டமைப்பை அறிமுகப்படுத்த AMK திட்டமிட்டுள்ளது.
இளைஞர்கள் சாலையில் இறங்கி போராடுவது மட்டுமல்லாமல், கொள்கை விவாதங்கள், சட்ட ஆலோசனைகளிலும் நேரடியாக ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கமில் நம்பிக்கைத் தெரிவித்தார். அவர் கொண்டு வந்த இளைஞர் 2030 கொள்கை கட்டமைப்பானது, தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதையும் உறுதி செய்வதில் இந்த முக்கியமான முன்னுதாரண மாற்றத்திற்கான அடித்தளமாகும்.
இளைஞர்களின் சக்தி வெறும் சத்தமாக இருக்க முடியாது. அது ஒரு கட்டமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட சக்தியாக உருவாக்கப்பட வேண்டும். நாம் நேரத்தை வீணடிக்க முடியாது என்று அவர் உறுதியாக கூறினார். தனது தலைமையின் கீழ், இளைஞர்கள் தங்கள் பலத்தை ஒழுங்கமைக்கவும், அரசியல் சீர்திருத்தம், தேசிய வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்கவும் தயாராக உள்ளனர்.
மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. தான் புது முகமாக இருந்தாலும் தனது செயல்கள் உள்ளடக்கத்தை வடிவமைக்கத் தொடங்கியுள்ளன என்கிறார் கமில்.




















