மலாக்கா:
தாங்கா பத்து, கம்போங் பாயா லுபோ அருகே இன்று காலை சுகாதார அமைச்சகத்தின் ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் வழுக்கி குடைசாய்ந்தது.
இன்று காலை 10.40 மணியளவில் நடந்த சம்பவத்தில் 30 வயது மருத்துவ உதவியாளர் ஒருவர் காயமடைந்தார். 40 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார் என்று, மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி துணை கண்காணிப்பாளர் II முகமட் ஹஃபித்சதுல்லா ரஷீத் கூறினார்.
சம்பவம் தொடர்பில் காலை 10.48 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவரை மீட்டு சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்று அவர் சொன்னார்.





















