திரெங்கானு MRSM இல் பகடிவதைக்கு இடமில்லை; MARA தலைவர்

கோலாலம்பூர்:

திரெங்கானு MRSM கல்விக்கூடத்தில் 14 வயது சக மாணவரைப் பகடிவதைச் செய்து காயப்படுத்தியதாக நம்பப்படும் 6 மாணவர்களை MRSM கல்விக்கூடத்திலிருந்து நீக்கியிருப்பதாகவும், இவ்வாறான உடல் துன்புறுத்தல் சம்பவங்களை தாம் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக MARA தலைவரான டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

MRSM கல்விக்கூடங்களில் எல்லா மாணவர்களுக்கும் கல்விபயில வாய்ப்பளிக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இங்கு பயில வாய்ப்பளிக்கப்படுகிறது. அவ்வாறு வாய்ப்பைப் பெறும் மாணவர்கள் அடிப்படையில் ஒழுக்கமாக இருப்பதை MRSM நிர்வாகம் உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட 14 வயது மாணவரின் முதுகு. வயிறு, ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் விலா எலும்பு வரையும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here