கோலாலம்பூர்,
வரும் ஜூலை 8 முதல் 11 ஆம் தேதி வரை கோலாலம்பூர் நகர மையத்தில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் 15 முக்கிய சாலைகள் கட்டுப்பாடுகளுடன் மூடப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
மூடப்படவுள்ள நெடுஞ்சாலைகள்:
Maju expressway,
KLIA-Putrajaya on the central link of the North-South expressway (Elite highway)
Sungai Besi-KL on the KL-Seremban highway.
மூடப்படவுள்ள 15 முக்கிய சாலைகள்:
Lebuh KLIA
Lingkaran Putrajaya
Jalan Istana
Jalan Damansara
Jalan Tun Abdul Razak
Jalan Ampang; Jalan Sultan Ismail
Jalan Bukit Bintang
Jalan Imbi
Persimpangan Jalan Ampang/Jalan P Ramlee
Persimpangan Jalan Sultan Ismail/Jalan P Ramlee
Persimpangan Jalan Perak/Jalan P Ramlee
Persimpangan Jalan Perak/Jalan Pinang
Persimpangan Jalan Stonor/Jalan Kia Peng
Persimpangan Jalan Stonor/Persiaran KLCC.
அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஜூலை 4 (இன்று) முதல் ஜூலை 7 வரை இந்த சாலைகளுக்கான முன்னேற்பாடு பயிற்சிநடத்தப்படும். அதற்குப் பின், மூடல் நடவடிக்கைகள் ஜூலை 8 முதல் 12 வரை நடை பெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.