கூச்சிங்:
கூச்சிங் நகரின் புகழ்பெற்ற ஆற்றுப் போக்குவரத்துக்கான புதிய முயற்சியாக, மின்சாரத்தால் இயங்கும் ‘பெனாம்பாங்’ (E-Penambang) படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, சபா பிரீமியர் டத்தோ படிங்கி டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று புதிய மின்சார படகில் பயணம் செய்து அதன் செயல்பாடுகளை நேரடியாக அனுபவித்தனர்.
இந்த முயற்சி, கூச்சிங்கை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்றுவதற்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
“E-Penambang கூச்சிங் ஆற்றுப் போக்குவரத்தை பாதுகாப்பான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண முறையாக மேம்படுத்துவதோடு, பாரம்பரிய ‘perahu tambang’ வடிவமைப்பையும் பராமரிக்கிறது,” என்றும் குறிப்பிடப்படப்படுகிறது.





















