கோலாலம்பூர்:
சிலாங்கூரில், இணைய சூதாட்டம், போலி முதலீடுகள் தொடர்பான இரண்டு பெரிய மோசடிச் சம்பவங்களை, சிலாங்கூர் காவல்துறை முறியடித்துள்ளது.
இதன் வாயிலாக, RM515 மில்லியன் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சுங்கை பூலோவில், இணைய சூதாட்டக் கும்பலை நடத்திய, 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், பெரும்பாலானோர், வெளிநாட்டினர் ஆவர். இந்தக் கும்பல், ஃபேஸ்புக்கில் (Facebook) பெண்களைப் போல நடித்து, பாதிக்கப்பட்டவர்களை, சூதாட்டத் தளங்களுக்கும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கும், பணம் அனுப்பும்படி ஏமாற்றி வந்துள்ளது.
சுபாங் ஜெயா, ரவாங் பகுதிகளில், அனைத்துலக முதலீட்டு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பல், ஹாங்காங், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள மக்களை, வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளைப் போல நடித்து, போலி முதலீட்டுத் திட்டங்களில், பணம் செலுத்துமாறு ஏமாற்றி வந்துள்ளது.
இரு வழக்குகளும், தற்போது விசாரணையில் உள்ளன.





















