இன்று 6,517 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் இன்று 6,517 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,535,338 ஆக உள்ளது. அக்டோபர் 22ஆம் தேதிக்குப் பிறகு, 21 நாட்களில் அதிகப்பட்சமாக இன்று புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

புதிய வழக்குகள் 6,000 க்கு மேல் இருப்பது இது தொடர்ந்து மூன்றாவது நாளாகும். R-naught மதிப்பு, அல்லது தொற்று விகிதம், நேற்று 1.0 ஆக உயர்ந்தது. இது மீட்பு நிலை ஸ்தம்பித்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. 1.0க்கு கீழ் உள்ள மதிப்பு என்பது கோவிட்-19 இன் பரவல் குறைகிறது என்றும், அதிக மதிப்பு என்றால் அது வேகமடைகிறது என்றும் அர்த்தம்.

தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 1.3 விழுக்காடு குறைந்துள்ளது. இருப்பினும், சில மாநிலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோலாலம்பூர் (+45.3 %), மலாக்கா (+31.8 %), நெகிரி செம்பிலான் (+19.7 %) மற்றும் பேராக் (+12.7 %).

அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்களின் புதிய தொற்றுகளின் இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் வெளியிடும். 6,323 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நேற்றைய (நவம்பர் 11) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (1,568), கிளந்தான் (678), ஜோகூர் (649), சபா (579), சரவாக் (409), பகாங் (403), கெடா (351), கோலாலம்பூர் (339), பினாங்கு (276),
நெகிரி செம்பிலான் (275), பேராக் (246), தெரெங்கானு (223), மலாக்கா (158),
புத்ராஜெயா (84), பெர்லிஸ் (60), லாபுவான் (25).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here