இந்தூர்: லாரி மோதியதில் இருவர் பலி; பலர் காயம்!

கோலாலம்பூர்:

மத்தியப் பிரதேசம், இந்தூர், விமான நிலையச் சாலை, ஸிக்ஸாக் நகரில் , நேற்று மாலை, அதிவேகமாக வந்த, லாரி ஒன்று வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதியதில், குறைந்தது, இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர், காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில், லாரியும் ஒரு மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்ததால், அப்பகுதியில், பதற்றம், நிலவியது.

இதனிடையே, லாரியின் ஓட்டுநர், அதிக போதையில், இருந்ததாக, காவல்துறை, தெரிவித்துள்ளது. அவர், முதலில், ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர், மற்ற வாகனங்கள் மீது, மோதியுள்ளார்.

எனவே தான் இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு, அனுப்பப்பட்டார்.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர், அவரது மைத்துனரின், கால்கள், துண்டிக்கப்பட்டதாக, கூறினார்.

எனவே தான், முதலமைச்சர் மோகன் யாதவ் (Mohan Yadav), உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தனது, இரங்கலை, தெரிவித்துக் கொண்ட அதே வேளையில் இந்தச் சம்பவம் குறித்து, முழுமையாக விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்

. மேலும், இரவு, 11 மணிக்கு, முன்னதாக, எப்படி, கனரக வாகனங்கள், நகருக்குள், நுழைந்தன என்பது குறித்தும், விசாரிக்க, அவர், உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக, நிவாரண உதவிகளையும், உரிய மருத்துவச் சிகிச்சையையும், உறுதி செய்யுமாறு, உயர் அதிகாரிகளுக்கு, அவர், உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here