தாய்லாந்து-கம்போடியா மோதல் தொடர்பில் மலேசியா மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தியது – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்,

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான உரிமை மோதல்களைத் தீர்க்க, மலேசியா மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“நேற்று இரு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. நான் தாய்லாந்து மற்றும் கம்போடியா பிரதமர்களுடன் உரையாடினேன்,” என்று இரு நாடுகளின் மோதல் தொடர்பில் மீடியாக்களிடம் பதிலளிக்கும்போது பிரதமர் கூறினார்.

Global Halal Summit (GHaS) 2025 மற்றும் Malaysia International Halal Showcase (MIHAS) நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் இந்த செய்தியை அவர் தெரிவித்துள்ளார். இதில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, மலேசிய ஹலால் தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர், மற்றும் பிற அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், தாய்லாந்து படைகள் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பி வர அனுமதி மறுத்துள்ளதாக கம்போடியா பிரதமர் ஹுன் மனேட் ஐ.நா. தலைவருக்கு எழுத்தில் புகார் கொடுத்ததையும் பிரதமர் நினைவுபடுத்தினார்.

இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதம், 33 பேர் பலியாகியா மோதலுக்குப் பிறகு, தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் தற்காலிக அமைதி உடன்படிக்கை அமுலில் இருக்கிறது. இந்த மைட்டி உடன்படிக்கைக்கு மலேசியா பெரும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here