ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி 2ஆம் நாள் பூஜை

சிலாங்கூர் மாநிலத்தில் ஷா ஆலாம் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி 2ஆம் நாள் பூஜை வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடை பெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந் திருந்தனர்.

அன்னை பராசக்தியை பக்தி, உண்மையான அன்புடன் வழிபட்டு அவளின் அருளை பெறுவதற்குரிய காலம் நவராத்திரி ஆகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பல்வேறு ரூபங்களில் அலங்கரித்து வழிபடுவது வழக்கம். கொலு, கல சம், அகண்ட தீபம், படம் வைத்து என பல வடிவங்களில் அம்பிகையை நம்முடைய வீட் டில் எழுந்தருளச் செய்து, அந்தந்த நாளக்குரிய தேவிக்கு விருப்பமான பொருட்களை படைத்து, அம்பிகையை மனதை மகிழ்விக்க வேண்டும்.

   நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக வழிபட்டோம். இதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ராஜ ராஜேஸ்வரியாகவோ அல்லது சியாமளா தேவியாகவோ அலங்கரித்து வழிபட வேண்டும். நவதுர்க்கைகளில் இரண்டாம் நாளுக் குரிய தேவியாக கருதப்படுபவள் பிரம்மசாரிணி. இவள் ஒரு கையில் ஜப மாலையும், மறுகையில் கமண்டலமும் கொண்ட ரூபத்தில் காட்சி தரக் கூடியவள். அன்னை ராஜ ராஜேஸ்வரி தேவிகளுக்கு எல்லாம் தேவியாக விளங்கக் கூடியவள். ஸ்ரீசக்கரத்தின் மீது வீற்றிருந்து அருள் செய்யக் கூடியவள்.

நவராத்திரியின் இரண்டாம் நாளில் ராஜ ராஜேஸ்வரியாக அம்பிகையை அலங் கரித்து, கட்டம் வகையிலான கோலம் போட்டு வழிபட வேண்டும். மலர்களில் முல் லையும், இலைகளில் மருவும் கொண்டு அன்னையை அர்ச்சித்து வழிபட வேண்டும். நைவேத்தியம் புளிசாதமும், சுண்டல் வகையில் வேர்க்கடலை சுண்டலும் படைத்து வழிபட வேண்டும். பழங்களில் மாம்பழமும் படைக்க வேண்டும். இந்த நாளில் கல் யாணி ராகத்தில் அமைந்த பாடல்கள் பாடி அன்னையை மகிழ்விக்க வேண்டும். அன் னைக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். நாமும் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.

நவராத்திரி 2ம் நாள் வழிபாட்டு பலன்கள் :

கல்வி, ஞானம், அறிவு, மனதில் தைரியம் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் எது வாக இருந்தாலும் அதை நீக்கக் கூடியது நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபாடு. நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரக் கூடியவள் அன்னை ராஜ ராஜேஸ்வரி.

சொல்ல வேண்டிய மந்திரம் :

ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் படித்து அம்பிகையை வழிபடலாம். ராஜ ராஜேஸ்வரி அம் மனை மனதார நினைத்து ” ஓம் ராஜராஜேஸ்வரியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அர்ச்சனை செய்து வழிபடலாம். நவதுர்க்கைகளில் பிரம்மச்சாரிணி தேவிக்குரிய தியான மந்திரமான,

“ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்
தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தம் “

என்ற மந்திரத்தை இரண்டு நெய்விளக்குகள் ஏற்றி வைத்து, 11 முறை சொல்லி வழிபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here