மலேசிய வானிலை ஆய்வுத் மையம் எச்சரிக்கை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏழு முறை அதிகனமழை பெய்ய வாய்ப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 9 –

மலேசிய வானிலை ஆய்வுத் மையம் (MetMalaysia) எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலம் நவம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை ஐந்து முதல் ஏழு முறை வரை தொடர்ச்சியான அதிகனமழைப் ஏற்பட வாய்ப்புள்ளது என்று முன்னறிவிப்பு செய்துள்ளது.

பருவமழையின் ஆரம்பக் கட்டத்தில் கிளாந்தான், திரெங்கானு, பஹாங் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.

மேலும், ஜோகூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீடித்த கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

அனைத்து ஏஜென்சிகளும் தளவாடங்கள் (logistics), தகவல்தொடர்பு, பேரிடர் எதிர்கொள்ளும் தயார்நிலையை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

MetMalaysia-வின் 400க்கும் மேற்பட்ட வானிலை, ராடார் நிலையங்கள், கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்றை உண்மையான நேரத்தில் (real-time) கண்டறிய உதவுகின்றன என்றும், இது வெள்ளம் மற்றும் தொடர்புடைய பேரிடர்களுக்கான நாட்டின் தயார்நிலையை மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here