நாடாளுமன்றத்தில் RM419 பில்லியன் மதிப்பிலான 2026 பட்ஜெட் தாக்கல் – கேடும் பெருக்கமும் இல்லல்ல…….திருக்குறளுடன் ஆரம்பித்த பிரதமர்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (Budget 2026) தாக்கல் செய்தார்.

மொத்தம் RM419 பில்லியன் மதிப்பிலான இந்த பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான அரசின் தொலைநோக்கு திட்டங்களை வெளிப்படுத்துவதாக பிரதமர் வலியுறுத்தினார்.

மலேசிய வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டை (Budget 2026) இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் தாக்கல் செய்தார்.

இந்தப் பட்ஜெட், மக்களுக்கான வாழ்க்கைச் செலவு நிவாரணத்தையும், நீண்ட கால வளர்ச்சிக்கு அவசியமான நிதி ஒழுக்கத்தையும் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது 13வது மலேசியத் திட்டத்தின் (13th Malaysia Plan) அடித்தளத்தை அமைக்கும். உள்நாட்டுத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், இலக்கிடப்பட்ட மானியச் சீரமைப்பு, மக்களுக்கு உகந்த நடவடிக்கைகளில் பட்ஜெட் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here