பள்ளி பாதுகாப்பு வலுப்படுத்தல்: கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறையுடன் இணைக்கும் யோசனை

கோலாலம்பூர்:

மலேசிய உள்துறை அமைச்சு, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை (CCTV) காவல்துறையுடன் நேரடியாக இணைக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் பள்ளிகளில் நடைபெறும் வன்முறை, பகடிவதை (bullying), மற்றும் குற்றச் சம்பவங்களை உடனுக்குடன் கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுடியோன் இஸ்மாயில், “பள்ளி வளாகங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியம். கல்வியமைச்சு ஏற்கனவே 8 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி, முக்கிய இடங்களில் கேமராக்களை நிறுவி வருகிறது. அந்த கேமராக்களை காவல்துறை கட்டமைப்புடன் நேரடியாக இணைக்கும் சாத்தியத்தை தற்போது ஆய்வு செய்து வருகிறோம்,” என்றார்.

அவர் இந்த அறிவிப்பை 2026ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவை முடித்துவைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here