மத்திய கிழக்கு பதற்றம்: மலேசியாவின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரம்! – ஐஜிபி அதிரடி உத்தரவு

கோலாலம்பூர் :

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரச மலேசியக் காவல்துறை (PDRM) உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், அந்நிய ஊடுருவல்களைத் தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள், நீர் விநியோக மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற முக்கியமான கட்டமைப்புகளில் (Critical Infrastructure) கூடுதல் பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பாதுகாப்பு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து மாநிலக் காவல்துறைத் தலைவர்களுக்கும், துறை இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறைத் தலைவர் (IGP) டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் பின்வரும் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஈரான் மற்றும் அதன் அண்டை பிராந்தியங்களில் நிலவும் போர்ச் சூழல் உலக நாடுகளுக்குப் பாதுகாப்புச் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புவிசார் அரசியல் (Geopolitical) மோதல்களால் மலேசியாவிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தச் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியைப் பேணுவதே காவல்துறையின் தற்போதைய முதன்மை நோக்கம் என்று ஐஜிபி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here