குலதெய்வம் உடன் இருப்பதை காட்டும் 3 முக்கிய அறிகுறிகள் :

உங்கள் குலதெய்வம் எப்போதும் உங்களுடனேயே இருந்து, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை 3 முக்கியமான அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1. நீங்கள் தினசரி வீட்டில் ஏற்றி வழிபடும் விளக்கு, ஏதாவது ஒரு முக்கியமான வேண்டுதலை நினைத்து அது நிறைவேற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, தீபத்தின் சுடர் திடீரென நேராக நிமிர்ந்து, பெரிதாக எரிகிறது என்றால், உங்கள் வேண்டுதல் நிறைவேற குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.

2. நீங்கள் ஏதாவது இக்கட்டான சூழல், பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டு இருக்கும் போது யாரோ ஒரு முகம் தெரியாத நபர், நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு உதவ முன்வருகிறார். உங்களை பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக வழி காட்டுகிறார் என்றால் நிச்சயமாக உங்களின் குலதெய்வம் உங்கள் அருகிலேயே இருந்து உங்களுக்கு பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

3. தினமும் அதிகாலை 3 முதல் 4 மணிக்குள்ளான நேரத்தில், அல்லது அதிகாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு தானாக தூக்கத்தில் இருந்து விழிப்பு வருகிறது. யாரோ உங்களை எழுப்பியது போது எழுந்து கொள்கிறீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் குலதெய்வம் உங்களை அழைக்கிறது, உங்களுக்கு ஒரு செய்தியை சொல்லி, நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது என்று அர்த்தம்.

இந்த மூன்றில் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு நடந்தால் கூட குலதெய்வம் உங்களுடன் உங்கள் வீட்டில் இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு நடந்தால் உடனடியாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு வருவது சிறப்பு. அதிகாலையில் விழிப்பு வரும் போது, குலதெய்வத்தின் பெயரை 11 முறை சொல்லுங்கள்.

வீட்டின் பூஜை அறையில் தினசரி குலதெய்வத்திற்கு என தனியாக மண் அகலில் விளக்கேற்றலாம். அல்லது குலதெய்வம் வாசம் செய்யும் இடம் என சொல்லப்படும் நிலைவாசலில் தினமும் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வந்தாலே வீட்டில் குலதெய்வத்தின் அருள் எப்போதும் நிலைத்து இருக்கும் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here