சிங்கப்பூர் நீர்ப்பரப்பில் ‘ஷெல்’ குழாயிலிருந்து எண்ணெய்க் கசிவு

சிங்கப்பூர்க் கடற்பரப்பில் நேற்று (அக். 20) அதிகாலை எண்ணெய்க் கசிவுச் சம்பவம் நடந்ததாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஷெல் நிறுவனத்தின் தரைவழிக் குழாயிலிருந்து காலை 5.30 மணியளவில் கடல்நீருக்குள் எண்ணெய் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையே அமைந்துள்ள அந்தக் குழாயிலிருந்து எண்ணெய் கசிந்தது குறித்து ஆணையத்திற்குப் பிற்பகல் 1 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பிற்பகல் 3 மணியளவில் எண்ணெய்க் கசிவு நிறுத்தப்பட்டதாக ஷெல் நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

மேலும் புதிதாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதுமில்லை என்று ஆணையம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அவெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆணையத்துடன் ஷெல் நிறுவனமும் இணைந்து எண்ணெய்ப் படலங்களை அகற்றப் படகுகளை அனுப்பியதாகக் கூறப்பட்டது. மேலும், கசிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றி எண்ணெய்யைக் கட்டுப்படுத்துவதற்கான மிதவைகளையும் ஷெல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, எண்ணெய்ப் படலங்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளையும் செயற்கைக்கோள் கருவிகளையும் செயற்பாட்டில் வைத்துள்ளதாக வும், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் அனைத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் எண்ணெய்ப் படலங்கள் கண்ணில் பட்டால் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here