கிளந்தான் தும்பாட்டில் அவசர வெள்ள எச்சரிக்கை: சுங்கை கிளந்தான், சுங்கை கோலோக் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்ட வாய்ப்பு – வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல்!

கோலாலம்பூர், நவம்பர் 24:

கிளந்தான், தும்பாட்டில் உள்ள சுங்கை கிளந்தான் மற்றும் சுங்கை கோலோக் ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் PRABN நேற்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் விளைவாக, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படாங் ரோக்மா, பெச்சா தெமலாங், செண்டெராங் பத்து, கம்போங் கோக் கெபிட் மற்றும் தாமான் ஸ்ரீ பாயு உள்ளிட்ட இரண்டு ஆறுகளின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தாழ்வானப் இப்பகுதிகள் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

அத்துடன் சுங்கை கோலோக் ஆற்றங்கரையோரம் உள்ள பல பாதிக்கப்படக்கூடியக் கிராமங்களும் அபாயத்தில் உள்ளன.

உள்ளூர்வாசிகள் விழிப்புடன் இருக்கவும், பேரிடர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், PublicInfoBanjir இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கம் மூலம் நிலவரங்களை கண்காணிக்கவும் இந்த எச்சரிக்கை வலியுறுத்துகிறது.

இந்த நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here