Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம். கார்களின் பின் பக்க விண்டுஷீல்டில் (பின் பக்க கண்ணாடி), கோடுகள் வழங்கப்பட்டிருக்கும். பலரும் இந்த கோடுகளை டிசைன் ஸ்டிக்கர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அவை டிசைன் ஸ்டிக்கர்கள் கிடையாது. பாதுகாப்பு நோக்கத்திற்காகவே இந்த கோடுகள் வழங்கப்படுகின்றன. இந்த கோடுகளுக்கு பின்னால் உள்ள அறிவியலை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். பொதுவாக குளிர் காலங்களில் காரின்...
கூகுள் உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது. எப்படி? என்று கேட்கிறீர்களா? கூகுள் பற்றி உங்களுக்கு தெரியும். உங்களை பற்றி கூகுளுக்கு தெரியுமா? நிச்சயம் தெரியும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் இருந்து நீங்கள் போன மாதம் என்ன செய்தீர்கள் வரை உங்களை பற்றி கூகுளுக்கு எல்லா விஷயங்களும் அத்துப்படி. உலகின் மிகப்பெரிய இன்டர்நெட் சேவை தரும் கூகுள் ஒவ்வொரு யூசர்களின் கணக்குகளையும் கையாண்டு வருகிறது. கூகுளில்...
சமூகவலைதளமான வாட்ஸ்-அப் பல்வேறு விதி முறைகளை தொழில் நுட்ப விதிப்படி வகுத்துள்ளது. கடந்த மே மாதத்தில் புதிய தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தன. இந்த விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்கள் கணக்குகளை அந்த நிறுவனம் தடை செய்து வருகிறது. இந்தநிலையில் நவம்பர் மாதத்தில் தொழில் நுட்ப விதிகளின்படி 17.59 இலட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு வாட்ஸ்-அப் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்- அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:- தொழில்நுட்ப விதிப்படி கடந்த ஆண்டின்...
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அம்சங்களும், அப்டேட்டும் வந்துகொண்டே இருக்கின்றன. அந்தவகையில் வாட்ஸ்அப் செயலியில் இன்று வெளியாகியிருக்கும் அப்டேட்டில் ஓர் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குரூப்பிலோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ தவறுதலாக மெசேஜ் அனுப்பும் பட்சத்தில் அதனை 'Delete for Everyone' கொடுத்து யாரும் பார்க்காதவாறு செய்துவிட முடியும். ஆனால் சில சமயங்களில்...
இந்த பிரபஞ்சம் பல விசித்திரங்களால் நிறைந்துள்ளது. எனவே ஓவ்வொரு நாளும் பல ஆச்சர்யங்கள் நடந்துகொண்டே உள்ளது போல ஆபத்துகளும் நிறைந்துள்ளது. இந்நிலையில் சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்க வருவதாகத் தகவல் வெளியாகிறது. அடுத்த ஆண்டிற்குள் சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவில் பிரச்சித்தி பெற்ற கலிபோர்னியா பல்கலை நடத்திய ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். இந்தச் சூரியல்தாக்குதலால் தகவல் தொழில்நுட்பத்தில் இணையதளம், சேட்டிலைட், மின்சாரப் பொருட்கள் அதிகம் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன. இது முற்றிலும் பொய் என அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்துப் அவர் கூறியதாவது:- ஒவ்வொரு வருடமும் பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒரு கட்டத்தில் சூரியனுக்கு...
மக்கள் மத்தியில் தகவல் தொடர்பு சேவைக்காக அதிக அளவில் பயன்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலி தற்போது தங்களது பயனர்கள் பயனடையும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த தகவல் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வாட்ஸ் ஆப்: நாட்டில் மிக அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலி தான் வாட்ஸ் ஆப். இந்த செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி...
வாட்ஸ்அப் செயலி செயலிழப்பதால் பயனர்கள் செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. சேவை இடையூறு நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியதாக நம்பப்படுகிறது, உலகெங்கிலும் உள்ள பல செய்தி இணையதளங்களும் இதையே தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் சேவைகள் நாடு முழுவதும் முடங்கியுள்ளதாக இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகியவை கவரேஜால் பாதிக்கப்பட்ட முக்கிய பிராந்தியங்கள் மற்றும் நகரங்களில் அடங்கும். உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை...
பெட்டாலிங் ஜெயா: மலேசிய வான்வெளியில்  16 பிப்ளிஸ்  விடுதலை இராணுவ விமானப்படை விமானங்களை (16 People’s Liberation Army Air Force ) தடுத்து நிறுத்த ராயல் மலேசிய விமானப்படை (RMAF) போர் விமானங்கள் துரத்தி அடித்ததாக ஆர்எம்ஏஎஃப் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், ஆர்.எம்.ஏ.எஃப் 16 விமானப்படை விமானங்களின் "சந்தேகத்திற்கிடமான" விமானம் காலை 11.53 மணிக்கு சரவாகில் உள்ள விமான பாதுகாப்பு மையத்தால் கண்டறியப்பட்டது. விமானப்படை விமானங்கள் தந்திரோபாய உருவாக்கத்தில்...
https://makkalosai.com.my/mycms_uploads/2023/10/The-first-real-MONEY-RAIN-iitch.mp4 பிரேக், செக்குடியரசு நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரியும் கஸ்மா என்பவர், ஹெலிகாப்டரில் இருந்து இப்படி ஒரு மில்லியன் டாலர் பணத்தை கீழே கொட்டினார். கமில் பார்டோஷேக் நகரின் மீது பறந்தபடி இப்படி பணத்தை சிதறவிட்டார். இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் பணமழையில் நனைந்தனர். ஒருகணம் வானில் இருந்து பணம் கொட்டுவதை அறிந்து திகைத்த அவர்கள் மறுகணமே பணத்தை பொறுக்குவதில் போட்டாபோட்டி போட ஆரம்பித்தனர். அவர் தொலைக்காட்சியில் ஒரு போட்டியாளரை அதிர்ஷ்டசாலியாக...