இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 2 மாதமாக அந்நாட்டில் எக்ஸ் சேவையில் பல்வேறு தடங்கல் இருந்த நிலையில், தடை விதித்திருப்பதை நீதிமன்றத்தில் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அரசின் உத்தரவுக்கு இணங்க பல்வேறு கணக்குகள்/ பதிவுகளை எக்ஸ் தளம் முடக்காததால், தடை விதிக்கப்பட்டிருப்பதாக கருத்துரிமை அமைப்புகள் கூறியுள்ளன. இவ்விவகாரத்தில் உள்துறை செயலாளர்...
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மூடுவிழா காண்கிறது என்றொரு தகவல் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது. இதனையடுத்து கூகுள் விளக்கமளித்துள்ளது, ’சமூக ஊடக தகவலில் பாதி மட்டுமே உண்மை’ என தெளிவுபடுத்தி உள்ளது. நடப்புலக இணையசேவை மற்றும் தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவைக்கு மறுக்க முடியாத இடம் உண்டு. அன்றாடம் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை, வெறும் தகவல் தொடர்புக்கு...
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் ByteDance நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால், அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது. அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறதுடிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...
கூகுள் AI தொழில்நுட்ப தரவுகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டைச் சேர்ந்த லியோன் டிங் (38), கடந்த 2019-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர், கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டிங் தரவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2022 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை தனிப்பட்ட கிளவுட் கணக்கில் கூகுளின்...
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கல்வி உட்பட நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள  KTCT மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. ‘மேக்கர்லேப்ஸ் எடுடேக்’ எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை...
வா‌ஷிங்டன்: டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்ய வழிவகுக்கும் சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார். அச்சட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம், டிக்டாக் தளத்தின் உரிமையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அத்தளம் தடைசெய்யப்படக்கூடும். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சனும் அந்த சட்டத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். “நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் நான் கையெழத்திடுவேன்,” என்று...
You Tube வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை, எலான் மஸ்க் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறார். அனைத்துக்குமான தளமாக தனது X தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியின் அங்கமாக, புதிய வீடியோ செயலியை எலான் மஸ்க் வெளியிட இருக்கிறார். உலகளில் முன்னணி வீடியோ தேடல் மற்றும் பார்வை தளமாக யூடியூப் விளங்கி வருகிறது. எலான் மஸ்கின் இந்த அதிரடி கூகுளின் முக்கிய அங்கமான You Tube-பின் சந்தையை பாதிக்கக்கூடும். நஷ்டத்தில்...