ஸ்ரீரங்கம் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், பிரிந்து நிற்கும் கணவன்- மனைவி, பிற உறவுகள் ஒன்றுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம். இதுவே திருவரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவர்களுக்கு பெரிய கோவில் என்றால் ‘சிதம்பரம்’, வைஷ்ணவர்களுக்கு பெரிய கோவில் என்றால் திருவரங்கம்.
ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் கொண்ட கோவில். 21 கோபுரங்களையும், 7 பிரகாரங்களையும், 42 உப சன்னிதிகளையும், 8 உப கோபுரங்களையும் கொண்ட ஆலயம் இது. வைணவத் திருப்பதிகளில் முதல் இடம் வகிப்பது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது.
அகத்திய முனிவரின் சாபத்தால் அவரது கமண்டலத்தில் சிறைபட்டு துன்பப்பட்டாள் காவிரித் தாய். அந்த துன்பத்தில் இருந்து விடுபட, இங்குள்ள உத்திரவாகினியில் நீராடி சமுத்திரராஜனை சென்றடைந்ததாக செவி வழி ஒன்று சொல்லப்படுகிறது.
இத்தலத்து பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், பிரிந்து நிற்கும் கணவன்- மனைவி, பிற உறவுகள் ஒன்றுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.