அறிதல் இல்லாத அறிவு புரிதல் இல்லாத பொய்மை

அறிதல் இல்லாத அறிவு

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல. தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல என்பது பாடல் வரிகள்.

இந்த வரிகளை அங்பைோடும் நேரம் இப்போது வந்திருக்கிறது. அதிலும் தன்னை மறந்திருக்கும் மனிதர்களுக்கு இந்த வரிகள் மிக முக்கியமாத் தேவைப்படுகிறது.

இன்றைய நிலை இக்கட்டானது. மலேசியம் கொரோனா 19 தொற்று சிக்கலில் தவிக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிக்கியிருக்கின்றனர். இது எப்படி நடந்தது?

விளையாட்டுக்காகவும் நகைச்சுவைகாகவும் சொல்வது போல், அறிவு இருந்தது, இப்போது இல்லை என்பதாகத்தான் சிலரின் குணம் அமைந்திருக்கிறது. அன்புக்குப் பதில் ஆணவம் நிறைந்திருக்கிறது. பண்புக்குப் பதில் கொடிய நஞ்சு நிறைந்திருக்கிறது .

மனித குணம் அன்பு நிறைந்த தேன்கூடு. மனித வாழ்க்கைக்கு தேன்கூடு நல்ல உதாரணம். இந்த உலகம் அழகிய வண்ணங்களால் ஆனவை.

அந்த வண்ணங்களை மலர்கள் வழி அடையாளம் காட்ட தேனிக்களே உதவின.

நூறாண்டுகள் வாழும் அற்புத மருந்து மலர்களில் இருப்பதை தேனீக்கள் உணர்ந்த பிறகுதான் மனிதன் அறிந்தான்.

அது பயனானது என்பதும் பிறகுதான் உணர்ந்தான். தேன் தயாரிக்க மனிதானால் முடியாது. இது இயற்கையின் விளையாட்டு. இயற்கை தருவதை மனிதனால் கொடுக்கமுடியாது.

தேனீக்கள் உழைப்பை மனிதன் பறித்துகொள்கிறானா? அல்லது தேனீக்கள் மனிதனுக்காக உதவுகிறதா என்பதும் தெரியவில்லை. மனிதன் சீயநலக்காரன். உழைப்பைத் திருடுவதில் வல்லவன்.

தேனீக்கள் உழைப்பை மனிதன் திருடுகிறான் என்பதுதான் உண்மையாக இருக்கவேண்டும். அதனால்தான் பாதுகாப்புக்காக தேனீக்களுக்கு கொட்டும் சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறான்.

மக்கள் பாதுகாப்புக்காக சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. அதைக் கடைப்பிடித்தால் ஒழுங்கு என்ற தேன் மக்களுக்குப் போய்ச் சேரும். தேனிக்களும் அமைதியாக இருக்கும்.

இதற்கு மாறாக நடந்தால் தேனிக்கள் கொட்டத்தான் செய்யும். முரண்டிபிடித்தால் இப்படித்தான் நடக்கும். இதுதான் நம் நாட்டிலும் நடக்கிறது. முரண்டு பிடிப்பதால் சமுதாய சிந்தனையாளர்கலும் கொட்டுப்படுகிறார்கள். பாதகங்கள் பெருத்துக்கொண்டே போகின்றன.

அறிவுள்ளவர்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்வதில் அர்த்தமே இல்லை. அறிவுள்ள மனிதன் சிந்திப்பான். அடம்பிடிக்கமாட்டான். கூட்டங்கள் கூடுவது அறிவூட்டும் வார்த்தைகளைக் கூறுவதற்குத்தான் என்றால், தவறு திருத்தப்படவில்லையே, ஏன்?

கொரோனா 19 எனும் தீமை பெருகிக்கொன்டே போகிறது என்றால் சிந்தனை வளரவில்லை என்பதுதானே பொருள். நல்லவர்களும் நாடும் கப்பாற்றப்படவேண்டும் என்ற நல்ல சிந்தனை இருந்தால், பாதிப்பில் இருக்கின்றவர்கள் தங்களை முன்னிலைப் படுதிக்கொள்ளவது அறிவுடைய செயலாகுமே! ஏன் செய்ய முன்வரவில்லை. பாவிகளால் அப்பாவிகள் பலியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here