மக்களிடம் பணம் விரைவாகச் சேர்க்கபடவேண்டும்!

கோலாலம்பூர் , மார்ச் 28-

தாமதமின்றி பணம் கொடுக்கப்படுவது விரைவாக நடக்கவேண்டும் என்று தேசிய வங்கியின் முன்னாள் துணை கவர்னர் டான்ஸ்ரீ டாக்டர் லி சீ யான் கூறியிருக்கிறார்.

சுற்றுச்சுழல் மோசமடைந்திருக்கிறது. இதற்கு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்றால் ரொக்கப்பணம் என்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும். பிரதமர் அறிவித்த பொருளாதாரத்திட்டம் திட்டமாக மட்டும் இல்லாமல் மக்கள் கையில் ரொக்கம் இருப்பது முக்கியமானது என்பதைக் கவனத்தில் கொண்டு விரைவான நடவடிக்கைகள் தேவை.

இது, அவசரமான நேரம். மக்கள் கையில் ரொக்கம் இருக்க வேண்டியது மிக அவசியம். கடன் பற்றிச் சிந்திப்பதற்கெல்லாம் இது சரியான நேரமுமல்ல.

மக்களிடம் மிக விரைவாகப் பணம் சேர்க்கப்படவேண்டும். இதற்காக மே, ஜூன் மாதம் வரை இழுத்தடிப்பு சரியான முடிவாக இருக்காது. ஏப்ரல் என்பது கூட தாமதம்தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சிறுதொழில், வணிகர்கள் தங்கள் சிறு வியாபாரத்தை மூடினால் மீண்டும் தொடர்வதற்கு வழியிருக்காது. குறிப்பாக பி 40 பிரிவினர் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்குக் கைப்பணம் மிக அவசிமாகிறது.

அப்பணத்தை உடனடியாகச் சேர்ப்பதுதான் முதல்வேலையாக இருக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ டாக்டர் லிம் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here