2ஆம் உலகப் போருக்குப் பின் முதல் முறை விம்பிள்டன் ரத்து

டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர். 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் நடத்தவோ அல்லது தள்ளிவைக்கப்படவோ சாத்தியமில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

நேற்று இங்கிலாந்தில் ஒரே நாளில் இந்த கொடிய கொரோனா வைரஸ் 500-க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தது. தொற்று இங்கிலாந்திலும் மின்னல் வேகத்தில் பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2-வது உலகப்போரின் போது ரத்து செய்யப்பட்டது.

அதாவது 1945-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டனை நடத்த முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது. இதனால் சாம்பியன்கள் ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ், ஹாலெப் போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here