உலக அளவில் கொரோனா – பலி 53 ஆயிரத்தை தாண்டியது

பாரீஸ்,ஏப்ரல் 3-

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 5,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 53,167 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இத்தாலியில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 115,242 கடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.44 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,070- ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here