மின்னியல், மூக்குக் கண்ணாடி கடைகளுக்கும் முடி திருத்தும் கடைகளுக்கும் அனுமதி

புத்ராஜெயா,ஏப்.11-

முடி திருத்தும் கடைகள், ஹார்ட்வேர் கடைகள், மின்னியல் பொருள் கடைகள் கடுமையான நிபந்தனைகளுடன் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவின் கீழ் செயல்பட அனுமதிக்கப்படும்.

சில குறிப்பிட்ட துறைகள் கட்டம் கட்டமாக மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் நிரந்தர நடைமுறை விதிமுறைக்கு ஏற்ப அவை செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் துறைகள் பற்றியும் சில துறைகள் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட அனுமதிப்பது பற்றியும் அனைத்துலக வர்த்தக தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வெளியிட்டார்.

முடி திருத்தும் கடைகள் அல்லது ஹேர் சலூன் எனப்படும் சிகை அலங்கார மையங்கள் முடி வெட்டுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அவர் சோன்னார்.

ஹார்ட்வேர் கடைகள், மின்னியல் பொருள் கடைகள், மூக்குக் கண்ணாடி கடைகள் ஆகியவை திறக்கப்படுவதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாக அவர் சோன்னார்.

சுய சேவை அடிப்படையிலான சலவை நிலையங்கள் தொடர்ந்து மூடப்படும். முழு சேவைக்கு உட்பட்ட சலவை மையங்கள் அனுமதிக்கப்படும்.

கொரோனா நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மைமிக்கதாக இருப்பதை உறுதிப்படுத்தவும் மலேசியர்கள் வேலை இழப்பதைத் தடுப்பதற்கும் தற்போதைய உத்தரவு நீடிக்கும் காலத்தில்
பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவைகளும் முக்கியமான பொருட்கள் கிடைப்பதும் அவசியமாகின்றது என்றார் அவர்.

ஏற்றுமதிக்கான வாகன உபரி பாகங்கள் தயாரிப்பு, சில குறிப்பிட்ட கட்டுமானத்துறை, சிமிந்தி, எக்கு துறைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது.

பதிவு பெற்ற பாரம்பரிய மாற்று மருந்து மையங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படும் நிறுவனங்கள் அமைச்சின் எனும் ஆன்லைன் மூலம் திங்கட்கிழமை தொடங்கி மனு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here