முடிவுக்கு வரும் சாத்தியத்தில் ஊரடங்கு

கோலாலம்பூர்: சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கையை மலேசியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன் கிழமை 85 பேருக்கு தொற்று இருந்தது.

வியாழக்கிழமை 110 பேருக்கு என உயர்ந்தது. வெள்ளிக்கிழமை 69 எனவும் நேற்று 54 எனவும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனினும் எந்த உலக நாடுகளும் ஊரடங்கை தளர்த்திக் கொள்வதாக துணிச்சலான அறிவிப்பை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக குறையுமானால் மலேசியர்கள் மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here