சௌகிட் மார்க்கெட் பகுதி முழுவதும் முள்வேலிக் கம்பிகள்

கோலாலம்பூர் –

நாட்டில் புகழ்பெற்ற சௌகிட் பாசார் வட்டாரம் முழுவதும் முள்வேலிக் கம்பிகள் போடப்பட்டுள்ளன. கோவிட்-19 தாக்கத்தின் எதிரொலியாக இந்த பகுதியிலும் இப்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

சௌகிட் ராஜா போட் சுற்றிலும் இந்த முள்வேலிக் கம்பிகள் அமைக்கும் பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இங்குள்ள மக்களுக்கு கோவிட் -19 தொற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில் நடமாட்ட உத்தரவு வலுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 5.00 மணி முதல் இந்த பகுதியில் முள்வேலிக் கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கியது.

கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பில் இங்குள்ள மக்களிடமும் அந்நிய நாட்டவர்களிடமும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள மெனாரா ஒன் சிட்டி, மலாயன் மேன்சன், சிலாங்கூர் மேன்சனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களாக இங்குள்ள குடியிருப்பாளர்களிடம் மருத்துவப் பரிசோதனை பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று கிருமி கண்டவர்கள் உடனடியாக மருத்துமனைகளில் சேர்க்கப்பட்ட வேளையில் அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் ஊரடங்கு அகற்றப்பட்டிருக்கும் வேளையில் இப்போது சௌகிட் பகுதியிலும் தொற்றுநோய் அபாயம் தொடர்பில் நடமாட்ட உத்தரவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here