வெஸ்ட் பாயிண்ட் பத்திரிகை விற்பனையாளர் பரமசிவம் @ சிவா காலமானார்

பத்திரிகை விநியோகஸ்தரும் கிள்ளான் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான வெஸ்ட் பாயிண்ட் நிறுவன உரிமையாளருமான பரமசிவம்@ சிவா இன்று காலமானதாக தகவல் வழி அறியப்படுகிறது.

இன்று அவரது வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்ததாக தெரிகிறது. இறப்பிற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

பத்திரிகை விநியோகஸ்தராக பல ஆண்டுகளாக இருந்த சிவாவின் மரணம் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவா மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் நடக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here