சூர்யாவுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுவிட்டது என செய்திகள் பரவியது. ஒரு புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘கெட் வெல் சூன் சூர்யா அண்ணா’ என அதிகம் பதிவிட ஆரம்பித்தனர்.
ஆனால் உண்மையில் சூர்யாவுக்கு அந்த அளவுக்கு காயம் ஏற்படவே இல்லை. சூர்யா சென்ற வாரம் தனது வீட்டில் உள்ள ஜிம்மில் உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தபொது கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டாராம். அந்த சிறிய காயத்தை பற்றிய செய்தியைத்தான் தான் யாரோ சிலர் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு சூர்யா நடக்க முடியாத நிலையில் இருக்கிறார் என வதந்தி பரப்பியுள்ளனர்.
ரசிகர்களும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அது போலி என தெரிய வந்த பிறகு தான் சூர்யா ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.