வெங்கட் பிரபு – சிம்பு இணைந்து போட்டுள்ள திட்டம்?

சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவரும் மாநாடு படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். அறிவிக்கப்பட்டு நீண்ட தாமதத்திற்கு பிறகு தான் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியது. கடந்த பிப்ரவரியில் சென்னையில் ஷூட்டிங் துவங்கிய நிலையில் ஒரு பாடல் ஷூட்டிங்கிற்கு பிறகு ஹைதராபாத் சென்றது படக்குழு.

அங்கு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தான் கொரோனா பிரச்னை காரணமாக அரசு கட்டுப்பாடுகள் விதிக்க ஆரம்பித்தது. அதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னைக்கு திரும்பியது படக்குழு.

இதன்பிறகு மீண்டும் அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தால் மட்டுமே மீண்டும் ஷூட்டிங் துவங்கும் என்கிற நிலை உள்ளது. தற்போது சின்னத்திரைக்கு மட்டும் அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நடத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி அரசு அனுமதி அளித்தாலும் 100க்கும் அதிகமான பணியாளர்களை ஷூட்டிங்கில் அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்கு 100க்கும் மேற்பட்டவர்கள் தேவை படுவார்கள். அதனால் மாநாடு ஷூட்டிங் துவங்குவது இன்னும் சில மாதங்கள் தாமதம் ஆகும் எனதெரிகிறது .

அதனால் தற்போது வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இருவரும் வேறு ஒரு முடிவு எடுத்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தவுடன் அதே படக்குழு ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தை தயாரிக்கும் அதே தயாரிப்பாளர் தான் இதையும் தயாரிப்பார். அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் சம்பளத்தையும் பெற்றுகொள்ள உள்ளனர்.

இருப்பினும் இது பற்றிய உறுதியான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை. வரும் நாட்களில் அதை எதிர்பார்க்கலாம்.

சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள். சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் அவர். மாநாடு அவருக்கு இரண்டாவது படம்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

மாநாடு படத்தினை நிறுத்தி வைத்துவிட்டு படக்குழு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை எடுத்தாலும், அது வெளியான பிறகு அதே படக்குழு மீண்டும் மாநாடு படத்தின் ஷூட்டிங்கை துவங்கும் என கூறப்படுகிறது. இந்த சிறிய பட்ஜெட் படம் ஷேர் அடிப்படையில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here