பள்ளி பேருந்து கட்டனங்களுக்கு.. யார் பொறுப்பு?

கோவிட் 19 காலகட்டத்தில் நாடெங்கும் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டு இருக்கிறது தற்போது மலேசியாவில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அப்படி ஆரம்பித்தால் பள்ளி பெருந்துக்கான கட்டணம் நிலை நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

பொதுவாக ஒரு பள்ளி பேருந்தில் சுமார் 40 அல்லது 30 மாணவர்கள் பயனிக்கலாம். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் நடமாட்ட கூடல் இடைவேளி விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் ஒரு பேருந்தில் சுமார் 20 பேர் தான் பயணிக்க முடியும்.

வசதி குறைந்த குடும்பங்களில் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை பள்ளிப் பேருந்தில்தான் அனுப்புகிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் சில பேர் வேலை இல்லாமல் வறுமைப் பின்னணியில் தவித்து வருகிறார்கள். இதன் பொருட்டு வரும் பிரச்சனைகளை யார் சரி செய்வது?

இந்த பிரச்சனைக்கான தீர்வுகளை பள்ளி நிர்வாகம் சீர்படுத்தித் தருமா? அல்லது அரசாங்கம் சரி செய்யுமா என்பதே சில பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here