விஷால் நிறுவனத்தில் மோசடி

சென்னை சாலிகிராமம் எம்ஜிஆர் தெருவில் பிரபல நடிகர் விழாவுக்கு சொந்தமான சினிமா பட தயாரிப்பு நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஷால் மேலாளர் அரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் போலீசில் கடந்த 2ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கடந்த 5 வருடங்களாக  அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் கணக்காளர் ரம்யா என்பவர் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய “டிடிஎஸ்” தொகையை போலியான ஆவணங்கள் மூலம் ரூ.45 லட்சம் பணம் மோசடி செய்து அதை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வங்கி  கணக்கில் போட்டு நூதனமான முறையில் மோசடி செய்துள்ளார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட  (ஐபிசி 408 , 420, 465, 468, 471,471(A )) 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here