பாம்பு பரோட்டா

மலேசியாவில் தற்போது பாம்பு வடிவில் தயாரிக்கப்படும் பரோட்டா எனப்படும் ரொட்டி சானாய் பிரபலமாகி வருகிறது.

கிளந்தான் மாநிலத்தின் குபோர் குடா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் முதன் முதலாக தயாரான இந்த வகை பரோட்டா தற்போது மெல்ல இதர கடைகளுக்கும் பரவி வருகிறது.

மைலோ, நெஸ்டம், வெண்ணெய், பிளாந்தா, சார்டின், முட்டை வகை ரொட்டி வகைகளை தயார் செய்து விற்ற உணவக உரிமையாளர், தான் சாப்பிட உருவாக்கிய பாம்பு பரோட்டாவைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் தனக்கும் இதுபோல வேண்டும் எனக் கேட்க அவருக்கு செய்து கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு பலரும் அதே பாம்பு பரோட்டாவைக் கேட்க அதனை தயார் செய்து தந்த உரிமையாளரைப் பின் தொடர்ந்து அதே வட்டாரத்தில் உள்ள இதர உணவகங்களும் பாம்பு வடிவ பரோட்டாவை தயார் செய்தன.

இந்த வகை பரோட்ட மெல்லப் பரவி ஜோகூர் பாரு வரை பிரபலடைந்து விட்டது. இந்த வகை பரோட்டாக்களை தயார் செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல எனவும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

பாம்பைப் போல இன்று பரோட்டாவை உருவாக்குவதை ஆதரித்தால் நாளை மனிதர்களை நிர்வாணப்படுத்துவது போன்ற தோற்றத்தில் பரோட்டா  தயாரிப்பார்கள். அதையும் ஆதரிப்போமானால் நாளை நாட்டு தலைவர்களின் தோற்றத்திலும் பரோட்ட வந்து விடும். இது ஆபத்தான செயல் என இணையப் பயன்பாட்டாளர்கள் கருத்துரைத்த வண்ணம் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here