சுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீதத்தா. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல வில்லன் நடிகர் நானா படேகர் ஹார்னுடன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனை வெளியே சொன்னதால் குடும்பத்தோடு தாக்கப்பட்டதாகவும் மும்பை போலீசில் புகார் அளித்தார். நானே படேகர் தமிழில் பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்துள்ளார். தனுஸ்ரீ புகாரை விசாரித்த போலீசார் ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்து விட்டனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் தனுஸ்ரீதத்தா இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு குறித்து கூறும்போது “மும்பை போலீசார் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்ப முடியாது. குற்றவாளிகள் மற்றும் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். என் விஷயத்தில் ஆதாரம் கொடுத்தும் பொருட்படுத்தவில்லை. மும்பை போலீசில் நான் கொடுத்த ஆதாரங்களை அமெரிக்க போலீசில் கொடுத்து இருந்தால் குற்றவாளிகள் இப்போது சிறைக்கு சென்று இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here