பணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்க சில பரிகாரங்கள்

பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்கவேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டில் கோமியத்தை தெளிக்கவேண்டும். இதை தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வந்தால் தரித்திரம் விலகி பணம் வரும்.

முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊறவைக்கவேண்டும். பின்னர் அதை அடுத்த நாளில் பறவைக்கோ அல்லது பசுவிற்கு உணவாக அளித்திட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்கும்.

பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பணவரவு அதிகரிக்கும்.

பாசிப் பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாக கட்டி உறங்கும்போது தலைக்கு கீழே வைத்துவிட்டு பின்னர் மறுநாள் அதை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துகொண்டு மூடி ஓடுகின்ற நீரில் விடவேண்டும். இப்படி செய்தால் நனது பணப்பிரச்சனையும் ஓடிவிடும்.

தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர தரித்திரம் நம்மை விட்டு விலகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here