மது அருந்தி வாகனம் ஓட்டிய நால்வர் கைது

பெட்டாலிங் ஜெயா, செப். 8-

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை தொடர்பில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 269 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதில் 4 பேர் மது போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆடவர்கள் 41 முதல் 58 வயதுடையவர்களாவர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையில் பல்வேறு சாலை குற்றங்களுக்காக 32 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டத என்றும் அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் குற்றச் செயல்கள், மது அருந்திவிட்டு கார் ஓட்டுவது போன்ற குற்றங்களை குறைப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிக் எஸானி எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here