வடபழநி ஆண்டவர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

ஐந்து மாதங்களுக்கு பின், கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, நேற்று முதல் கிருத்திகை என்பதால், வடபழநி ஆண்டவர் கோவிலில், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கொரோனா பரவாமல் தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.சிறப்பு வழிபாடுஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு, செப்., ௧ம் தேதி முதல், விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று கிருத்திகை என்பதால், வடபழநி ஆண்டவர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலை, 5:15 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்து, மூலவருக்கு ராஜ அலங்காரம் நடந்தது.காலை, 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை, 11:15 மணிக்கு, அபிஷேகம் நடந்து, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது.மாலை, 4:30 மணிக்கு மீண்டும் அபிஷேகம் நடந்து, சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.

இரவு, மூலவருக்கு சந்தனக் காப்பு சார்த்தப்பட்டு, பூஜைகள் நடந்தன.ஊரடங்கிற்கு பின், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டதால், நேற்று அதிகாலை முதல், வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.பக்தர்கள் பாதுகாப்பு கருகி, ‘சானிடைசர்’ கொண்டு கைகள் சுத்தப்படுத்தப்பட்டன.

முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன், வரிசையில் தரிசிப்பதற்கு ஏதுவாக, தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.நேரலை தரிசனம்கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பக்தர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்க ஏதுவாக, நேற்று மாலை, இணையதளம் மூலம் நேரலை தரிசனத்திற்கும், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

பெசன்ட்நகர், அறுபடை வீடு முருகன் கோவில், பிராட்வே கந்தசாமி கோவில், குன்றத்துார் முருகன் கோவில், குரோம்பேட்டை குமரன்குன்றம் ஆகிய கோவில்களிலும், ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here