‘சக்ரா’ படத்தின் கடைசிக்கட்ட ஷூட்டிங் தொடங்கியது

தமிழில் விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழு தெரிவித்துள்ளது . இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். மேலும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து ஓடிடி-யில் வெளியிடுவது குறித்து , நடிகர் விஷால் சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். நிச்சயமாக தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும் என்று அவர் சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here