சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி! ஆனால்..

துலாம் மாத பூஜைக்காக இன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கேரள அரசு சார்பில் முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இருப்பதால் சபரிமலையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா “நெகடிவ்”சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மலையேறுவதற்கு உடல் ரீதியாக எந்த ஆரோக்கிய பிரச்னையும் இல்லை என்ற அரசு மருத்துவரின் மருத்துவச் சான்றும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சானிடைஸர் கொண்டு வந்து பயன்படுத்துவதுடன் முகக்கவசம், கையுறைகள் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here