12ஆண்டு கழித்து இணையும் ஜோடி

நடிகை நயன்தாரா திரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளனன.

தமிழ் திரையுலகின் உச்ச நிலையில் இருக்கும் நடிகை நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழ் படத்தில் அறிமுகமானவர். இருப்பினும் தமிழில் அதிக படங்கள் நடித்து வந்தாலும் அதே சமயத்தில் நல்ல திரைக்கதை கிடைக்கும்போது மலையாளத்திலும் நடிப்பதை பழக்கமாகி வருகிறார். கடந்த ஆண்டு நிவின் பாலி இவர்க்கு ஜோடியாக நடித்த படம் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ இது நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் மலையாளத்தில் உருவாக உள்ள திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் பெயர் ‘நிழல்’ஆகும். இதில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் 20 படத்தில் ஒரு பாடல் காட்சியில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர்.

பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக முதல் படமாக எடுக்க உள்ளார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருப்பதால் இதற்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என நான் அவரை பரிந்துரை செய்ததாக நடிகர் குஞ்சாக்கோ போபன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நடிகர் நடிகைகள் தங்களின் சம்பளத்தை குறைக்கும்படி மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரபல நடிக்கர்களானா மோகன்லால், டொவினோ தாமஸ் உள்பட பல முன்னணி நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனால் இந்த படத்துக்காக நடிகை நயன்தாராவும் அவரது சம்பளத்தை குறைத்து உள்ளதாக தெரியவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here