5 கிலோமீட்டர் செம்மன் சாலையை கடந்து செல்லும் அவல நிலையில் புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி

கெமெஞ்சே, ஜன.27-
5 கிலோமீட்டர் செம்மன் சாலையைக் கடந்து செல்லும் அவல நிலையில் இங்குள்ள புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி உள்ளது.
கெமெஞ்சே பட்டிணத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டரில் அமைந்திருக்கும் புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, அப்பள்ளியின் தலைமையாசியராக ஜெயபாலன் கந்தையா பொறுப்பேற்ற பிறகு, தோட்டப்பள்ளி பூந்தோட்டப் பள்ளியாக உருமாறி வருகிறது என கூறகிறார் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி நளினி.
இத்திட்டத்தில் உட்பகுதியில் அமைந்துள்ள  அப்பள்ளிக்கு வருவது என்றால், சுமார் 5 கிலோமீட்டர் செம்மண் சாலையை கடந்து வர வேண்டி உள்ளது.
மழைக்காலம் என்றால் அச்சாலை முழுவதும் சேறும் சகதியுமாகிவிடுவதால், போக்குவரத்துக்குப்  பெரும் சிரமத்தை
எதிர்நோக்க வேண்டியுள்ளது.
செம்மண் சாலையை மேம்படுத்தி தார் சாலை அமைத்து தரும்படி இங்குள்ள தோட்ட நிர்வாகத்திற்கு பல முறை தொடர் கோரிக்கைகள் கொடுக்கப்பட்டும். அக்கோரிக்கைக்கு அந்நிர்வாகம் சேவி சாய்க்க மறுத்துவிட்டது.
இந்த நிலைமையிலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் ஆசிரியர்களால் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
தற்போது இயங்கலை வழி அப்போதனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
இப்புதிய ஆண்டில் முதலாம் ஆண்டுக்கு ஒரு மாணவர் மட்டுமே பதிவு செய்துள்ள வேளையில், 4 புதிய மாணவர்கள் இதர ஆண்டு மாணவர்களாகப் பதிவு செய்துக் கொண்டுள்ளார்கள்.
இப்பள்ளிக்கு செல்லும் செம்மண் சாலையை தார் சாலையாக மாற்றித்தர, இத்தோட்ட நிர்வாகத்துடன் மாநில அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்துமா? அல்லது மக்கள் இல்லாத இந்த இடத்தை விட்டு வெளியில், மக்கள் நடமாட்டம் உள்ள இடத்திற்கு இப்பள்ளியை இடமாற்றம் செய்யுமா? எனும் கேள்வியை அவர் முன் வைத்தார்.
இதனிடையே இப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ,  பள்ளி மேலாளர் வாரியக்குழு ஆகியவற்றுடன் இணைந்து பல தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாலன் கூறினார்.
குறிப்பாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 
பள்ளி சீருடை, புத்தக பை, காலணி, காலுரை, நோட்டுப் புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
இன்றைய எம்சிஓ காலக்கட்டத்தில் இயங்கலை வழியாகவும், யூதீயுப் மூலமாக எளிய முறையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதற்கான வசதியான சூழலை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தித் தருவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.
ஒரு காலத்தில் வசதிகள் குறைவாக இருந்து வந்த இப்பள்ளியில், சுய முற்சியில் இங்கு மாணவர்கள் சிறப்பான கல்வி, புறப்பாட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
                                                          –நாகேந்திரன் வேலாயுதம்
9 Attachments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here