கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

முதலாம் ஆண்டில் 278 மாணவர்கள்

கிள்ளான், மார்ச் 1-

நாட்டில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளி என்ற பெருமையுடன் திரட்டுப் பள்ளி என்ற பாராட்டுக்குரிய கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு 278 மாணவர்கள் முதலாம் ஆண்டில் கால் பதிக்கின்றனர். ஆண்டுதோறும் பல கல்விப் புரட்சிகளை செய்து வரும் இப்பள்ளி இவ்வாண்டும் சாதனைப் புரிய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என கடந்தாண்டு மத்தியில் இப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராக நியமனம் பெற்ற சிவபாரதி விஸ்வநாதன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுத் தாக்கத்தால் சற்று காலதாமதமாக பள்ளியின் முதல் தவணை தொடங்கினாலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து வேலைகளையும் முறையாக செய்து முடித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி கிருமி நாசினி தெளிப்பு போன்றவற்றை மேற்கொண்டு பள்ளியை சுகாதாரமான முறையில் வைத்திருப்பதாக சிவபாரதி தெரிவித்தார்.

கடந்தாண்டு இப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 310 மாணவர்கள் இணைந்தனர். இவ்வாண்டு அந்த எண்ணிக்கை சற்று குறைவதற்கு காரணம், தற்போது கிள்ளான் தாமான் செந்தோசா பகுதியில் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி செயல்படத் தொடங்கியிருப்பதால் அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் அருகில் அப்பள்ளியில் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்துள்ளனர். இவ்வாண்டு இந்த சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் 1,840 மாணவர்கள் கல்விக் கற்று வருவதாகவும் இப்பள்ளி மாணவர்களின் சாதனைப் பயணம் இவ்வாண்டும் தொடரும் என சிவபாரதி தெரிவித்தார்.

பி.ஆர்.ஜெயசீலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here