மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

மகிழ்ச்சியில் ஜெராண்டுட் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்

ஜெராண்டுட்&

கோவிட் -19 தொற்றுக் கிருமி அச்சுறுத்தலால் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கவிருந்த 2021ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்கம் கல்வி அமைச்சால் ஒத்திவைக்கப்பட்டு நேற்று முன்தினம் நாடு தழுவிய அளவில் மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த வகையில் இங்குள்ள ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முதலாம், இரண்டாம் மற்றும் 5 வயது , 6 வயது பாலர் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளியில் காலடி எடுத்து வைத்தனர்.

இதில் முதலாம் ஆண்டில் 23 மாணவர்களும் பாலர் பள்ளியில் 5 வயது மாணவர்கள் 18 பேரும் 6 வயது மாணவர்கள் 20 பேரும் 3 முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் பள்ளிக்கு வர உள்ளனர் என்று பள்ளியின் தலைமையாசிரியர் இரா. குமாரசாமி தெரிவித்தார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு பென்சில் உட்பட பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கிய பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம். சரவணன், செயலவை உறுப்பினர்கள் சிவா, திருமதி சுகுணா, திருமதி கற்பகம் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தலைமையாசிரியர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களிடையே கோவிட் -19 தொற்றுக்கிருமி பரவாமல் இருப்பதற்கு முகக்கவசம் வழங்கிய முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் செல்வக்குமார், சிவநாதன் இருவரையும் பாராட்டினார்.
குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் மோகன் கணிசமான முகக்கவசப் பெட்டிகள் வழங்கி ஆதரவு அளித்தார்.

 

 

பி.ராமமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here