லோபாக் தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சரின் வருகை

 

சிரம்பான், 

கல்வி அமைச்சர் டாக்டர் முகமாட் ரட்சி பின் முகமட் ஜிடினின் லோபாக் தமிழ்ப்பள்ளிக்கு திடீர் வருகை மேற்கொண்டார். 

காலை 8.40 மணியளவில் பள்ளிக்கு வருகையாளித்த கல்வி அமைச்சரை அப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி மேனகை கருப்பையா, அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.எஸ்.குணசேகரன் ஆகியோர் வரவேற்றனர்.

முன்னதாக அமைச்சருடன் அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ யுஸ்ரான் ஷா பின் முகமட் யூசோப், நெகிரி மாநில கல்வி இயக்குநர் ஹஜி முகமட் ஃபியா பின் முகமட் ஜாமின், அதன் மாநில தமிழ்ப்பள்ளி பிரிவுக்கான உதவி இயக்குநர் தனபாலன் நாரயணன், சிரம்பான் மாவட்ட கல்வி அதிகாரி நோர்ஷசாம் பின் நாயான், அதன் மாவட்ட முகாமை அதிகாரி அருமைநாயகம் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

லோபாக் தமிழ்ப்பள்ளியில் மாணவர் அதிகரிப்பால், வகுப்பறை பற்றக்குறை ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ள வேளையில், அப்பள்ளியில் கூடுதலான வகுப்பறைகள் வேண்டும் என மக்கள் ஓசை செய்தியின் வழியாக அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.எஸ்.குணசேகரன் வலியுறுத்தியிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக இப்பள்ளிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காலி நிலத்தில் மூன்று மாடி இணைக் கட்டடம், 8 வகுப்பறைகள், மண்டபத்துடன் கட்டுவதற்கு கல்வி இலாகாவுக்கு மனுவொன்றை பள்ளி தலைமையாசிரியர், அதன் தொடர் நடவடிக்கையாக வழங்கி இருந்த்து.

அதற்கான அனுமதியைதி அப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் ஜெயகுமார் முனியாண்டி முன்னதாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் இத்திடிர் வருகையின் போது, அவர் இப்பள்ளியின் தேவைகள், எதர்நோக்கும் பிரச்சனைகள் இருப்பினும், அவை குறித்து தலைமையாசியரிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

அதற்கு தெளிவான விளக்கத்துடன் பதிலளித்த தலைமையாசியர் மேனகை அப்பள்ளியில் ஆண்டுத்தோறும் மாணவர்களின் அதிகரிப்பால் வகுப்பறைகள் பற்றக்குறை தொடர்கிறது, என்றும் அதற்கு நிரந்தர தீர்வாக இப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் இணைக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதியும், அதற்கான நிதி உதவியும் தேவைப்படுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு நேரிடையாக கொண்டு சென்றார்.

முன்னதாக இப்பள்ளியின் சிறப்பு மாணவர்கள், பாலர் பள்ளி மற்றும் ஒன்றாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

அப்பள்ளியிலுள்ள சில குறிப்பிட்ட வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர், மாணவர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தார், சில நிமிடங்கள் ஆசிரியராகவும் மாறி, தரையில் மூட்டி போட்டவாறு, அவர்களுக்கு பாடங்களை போதித்தார்.

அப்பள்ளி சிறப்பு மாணவர்களில் ஒரு சிலர் மாணவர்களின் நினைவற்றலை கண்டு அவர் வியந்தார் அவர், பாலர் பள்ளி மாணவர்களின் பேசி அகம் மகிழ்ந்தார். மிக கட்டுக்கோப்பாக பள்ளியின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை பாராட்டினார்.

சுமார் ஒரு மணி நேரம் லோபாக் தமிழ்ப்பள்ளியில் தனது நேரத்தை செலவழித்த அவர், முன்னதாக அப்பள்ளி பழம் பெயர்ந்த கட்டட அமைப்பின் வளாகத்தையும் சுற்றிப்பார்த்தார். மேலும் இணைக் கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையிலுள்ள நிலத்தையும் பார்வையிட்டார்.
கல்வி அமைச்சர் முகமட் ரட்சியின் அவ்வருகை இப்பள்ளிக்கு வரலாற்றுப் பூர்வமான ஒரு வகை என்றும், குறிப்பாக நாட்டின் கல்வி அமைச்சர் ஒருவர் இப்பள்ளிக்கு வருகையளித்தது, இப்பள்ளி வரலாற்றில் குணசேகரன் கூறினார்.

அமைச்சர் என்ற நிலையில் கடந்த 19.5.1999 அன்றைய தினம், இப்பள்ளி கட்டட திறப்பு விழாவை அன்றைய பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துவைத்தார் என்பதை அவர் நினைவுப்படுத்தினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு கல்வி அமைச்சர் மேற்கொண்டுள்ள இந்த திடீர் வருகையின் போது முன்னதாக, அவர் இங்குள்ள கேஜிவி தேசிய உயர் நிலைப்பள்ளிக்கும் வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நாகேந்திரன் வேலாயுதம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here