சன்னலைத்திறந்து எட்டிப்பாருங்கள் அமைச்சர்களே!

பெஞ்ச் பெரியசாமியின் இன்றைய அலசல்

இளைஞர்கள் நம் எதிர்காலங்கள்!

அதிக இரைச்சலுடன் வடிவமைக்கப்படும் மோட்டார் சைக்கில்களால் மக்கள் எரிச்சல் அடைகிறார்கள் என்பது  உண்மைதான்.

வீடமைப்புப்பகுதியில் உள்ளவர்களுக்கு இதனால் நிம்மதி கெடுகிறது. கோபம் அதிகரிக்கிறது. அதனால் ரத்த அழுத்தம் கூடுகிறது. பொதுவாகவே மன நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் மருத்துவச் செலவும் கூடுகிறது என்று சொன்னாலும் மறுப்பதற்கில்லை.

மோட்டார் சைக்கிலை மாற்றி அமைப்பதற்கான மாற்றுப்பொருட்களை விற்கும் கடைக்காரார்களை அமலாக்க அதிகாரிகள் ஏன்  சோதனை செய்யக்கூடாது? ஏன் அவர்களுக்கு சம்மன், அபராதம் அல்லது நீதிமன்றத்திற்கு அழைக்கக்கூடாது?

மோட்டர் சைகிளை மாற்றியமைக்கும்  அவர்களும் குற்றவாளிகள்தான் என்பதை ஏன் உணரக்கூஊடாது?

இளைஞர்களுக்கு பேரிரைச்சல் என்பதும் மோட்டார் சைக்கிளை மாற்றி வடிவமைப்பதும் ஒரு கலை என்றாகிவிட்டது. தங்கள் மோட்டார் சைக்கிளை மாற்றி அழகுப்படுத்துவதில் இளைஞர்கள் பெரும்பான்மையினர் மிகுந்த ஆர்வமுடையவர்களாகவே இருக்கின்றனர். இதற்காகவே சில ஆயிரங்களைச் செலவு செய்கின்றனர்.

இப்படியெல்லாம் மாற்றி அமைப்பதற்கான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், விற்பனை மையங்கள், கடைகளைத் தடுக்கும் சட்டம்  இருந்தால் , அல்லது வரையப்பட்டிருந்தால் இளைஞர்கள் அந்த பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்க்ளே!

தொழில் ரீதியாக இளைஞர்களைக் கவரும் கடைகள். மாற்றியமைக்கும் கடைமுதலாளிகளை ஏன் நீதிமன்றங்களில் நிறுத்த முயற்சி செய்யவில்லை. முதலில் விளையும் இடைத்தை அல்லவா சோதனை இட வேண்டும்.

உற்பத்தி நிறுத்தப்படவேண்டும் அப்போதுதான் பயன்பாடு குறையும் அல்லது நிறுத்தப்படும். 

பிள்ளை அழுகிறதே என்று தொட்டிலை ஆட்டுவதால் பயனில்லை. பிள்ளை ஏன் அழுகிறது என்பதையும் ஆராயவேண்டும். 

பிடிபட்ட மோட்டார் சைக்கிள்களை, இளைஞர்களை தண்டிப்பதைவிட  அவர்களுக்கு அவகாசம் கொடுக்கலாம் . 45 நாட்களில் தங்கள் மோட்டார் சைகிள்களை  பழைய நிலைக்கே மாற்றிய பின் அதற்கான ஆதாரத்தை சம்மனுடன் காவல் நிலையத்தில் காட்டுமாறு செய்யலாம்.

ஏன் 45 நாட்கள்? மீண்டும் பழைய அசலுக்கு மாற்ற பணம் திரட்ட 45 நாட்கள் உதவும் என்பதற்காகத்தான். 

இளைஞர்களைத் தண்டிப்பதை வீட்டு இளைஞர்களுக்கான களத்தை ஏற்பாடு செய்யும் திறன் இளைஞர் அமைப்பு செய்யவில்லை என்பதுதான் இப்போதைய பலவீனம் .

மலேசிய காவல்துறை, போக்குவரத்துத்துறை, இளைஞர் அமைப்பு, பயனீட்டாளர் அமைப்புகள் இணைந்து இது குறித்து பேசலாம் . முறையான இளைஞர் பொழுது போக்குத்தளங்கள் இல்லை. பல இடங்களில் காற்பந்தாட்ட திடல்கள் கூட இல்லை. இந்த நிலையில் இளைஞர்கள் வழி தவறுவது இயல்பாகிவிடும். 

இளைஞர்கள் என்றால் விளையாட்டு என்றுதான் இருக்கவேண்டும். அந்தந்த வட்டார போளிஸ்துறையினர் இளைஞர்களைத் திருத்த கண்காணிக்க, மாற்றுச்சிதனைகளை   உருவாக்க எந்த திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. 

இப்படியொரு சிந்தனையை உருவாக்கலாமே!

போலீஸ்காரர்கள் இளைஞர்களின் நண்பனாக மாற வேண்டும். வெறும் தண்டனையால் மட்டுமே  எதையும் சாதித்துவிட முடியாது.

மோட்டார்  சைக்கிள் லைசென்சுகளை பெறும் இடம் போலீஸ் நிலையமாக இருந்தாலும் நல்லதுதானே. 

நாட்டின் இளைஞர்களுக்கான செயற்பாடுகள் ஊட்டச்சத்து இல்லாமல் துவண்டுகிடக்கின்றன என்பதையும் சன்னலைத் திறந்து எட்டிப்பாருங்கள் அமைச்சர்களே!

கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here