நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. புற்றுநோயை தடுக்கும்

 –வெங்காய சூப்.. கட்டாயம் சாப்பிடுங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை குணமாக்கும் வெங்காயத்தை வாரம் ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் மிகவும் நல்லது.

தேவையானவை:

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் 3 கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேக விட வேண்டும். சிறிது வெங்காயத்தை ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைந்த சோள மாவு ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வேக வைக்கவேண்டும். ஒரு கொதி வரும்போது தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.

பயன்கள்:

100கிராம் வெங்காயத்தில் வெங்காயத்தில் உள்ள இரும்புச்சத்து எளிதில் உடலில் கலக்கும் தன்மை கொண்டது. ரத்த சோகை உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சினை சரியாகும். தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல், சளி பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு நல்லது. நெஞ்சு வலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் உறையும் பிரச்சனையும் சரியாகும். நுரையீரலை சுத்தம் செய்ய வெங்காயம் சிறிதளவு பயன்படுகின்றது. இருமல், சளி போன்ற பிரச்சினைகளும் குணமாகும்.

கமெண்ட்: வெங்காயத்தின் பலன் மிக அதிகம். அதை உரித்தவர்களுக்குத் தெரியும். கண்ணீரை வரவழைத்துவிடும். வீணாக யாரையும் வெங்காயம் என்று சொல்லிவிடவேண்டாம்!

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here