ஃபெல்டா பிள்ளைகளுக்காக 50 ஆயிரம் தொழில்திறன் பயிற்சி

கோலாலம்பூர்,

நாடு முழுவதுமுள்ள ஃபெல்டா நில குடியேற்றக்காரர்களின் பிள்ளைகள் தொழில் நுட்ப, தொழில்திறன் பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர்களுக்கு 50 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

நாட்டில் தொழில்நுட்ப, தொழில்திறன் பயிற்சி வழங்க நாடு முழுவதும் 1,334 பயிற்சி மையங்கள் உள்ளதாகக் கூறிய அவர், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற 12 அமைச்சுகள் பல்வேறு வகையிலான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

நாட்டில்  வளமான மனிதவளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஃபெல்டா குடியேற்றக் காரர்களின் மூன்றாவது முதல் ஐந்தாவது தலைமுறையினருக்கு இப்பயிற்சி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார். நாட்டிற்கு தேவைப்படும் ஆள்பலத்திற்கு ஏது வாக இந்த பயிற்சிகள் அமைந்திருக்கும் எனவும் அவர் சொன்னார்.

நாட்டில் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பல் வேறு புதிய பயிற்சிகளை அடையாளம் காணுமாறு தாம் மாராவின் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று ஃபெல்டா சேமோ மோயில் நடைபெற்ற மகளிர், குடும்ப உள்விவகார மன்றத்துடன் இணைந்து நடத்தப் பட்ட வேலை தேடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் இவ்வாறு சொன்னார்.

இந்நிகழ்ச்சியில் கிங் பல்கலைக்கழகக் கல்லூரி ஃபெல்டா குடியேற்றக்காரர்களின் பிள்ளைகளுக்கு 5 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள உபகாரச் சம்பளத்தையும்  வழங் கியது.நேற்று மேற்கொள்ளப்பட்ட வேலை தேடும் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களுக்கு ஓராயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைத்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here